மின்சார கட்டண பட்டியலை அடிப்படையாக வைத்து ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் என்ற அடிப்படையில் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் சிலர் பல சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்து அதை ஒரு வியாபாரமாக செய்வதை நிறுவனம் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் மேற்படி வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விநியோகத்தில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்புபட்டுள்ளதால் குழப்ப நிலைகள் உருவாகின்றன. அதனால் மக்கள் சமையல் எரிவாயுவை பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.