லிந்துலை மட்டுகலை தோட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை முறையாக வழங்காத காரணத்தினால் இவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை தோட்ட அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் சரியான பதில் கிடைக்காத காரணத்தினால் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக 50இற்கு அதிகமான தொழிற்சாலைகள் சத்திய கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.
தற்போது தோட்டத்தில் தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் குறைவு காரணமாக 18 கிலோ பறிக்க முடியாது எடுக்கும் கொழுந்து நிறைக்கு ஏற்ப முழுநாள் சம்பளத்தை வழங்க வேண்டும்.
காலை 7 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பகல் உணவு பெற்றுக் கொள்ள 12 மணிக்கு விடுமுறை வழங்க வேண்டும்.
சுகாதார வசதிகளை முறையாக மக்களுக்கு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வண்டி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
குடியிருப்புகளை அபிவிருத்தி செய்வதற்கு தோட்ட நிர்வாகம் பங்களிப்பு வழங்க வேண்டும்.
தோட்டத்தில் உள்ள சிறுவர் நிலையத்தில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் அதில் கடமை ஆற்றும் உத்தியோசர்களை வெளியில் அனுப்புவதை தவிர்க்கப்பட வேண்டும்.
என்ற கோரிக்கைகளை முன்வைத்து இம்மக்கள் சத்யகிரக போராட்டத்தை முன்னெடுத்த வருகின்றனர்.
தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கூடாரம் அடித்து பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எதிர்ப்பினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களின் கோரிக்கைகளை உடனடியாக செய்து தராவிட்டால் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கௌசல்யா