லொறியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களில் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் இல்லாத காரணத்தினால் லொறியொன்றில், பாடசாலைக்குச் சென்ற 13 மாணவர்கள் லொறியின் தட்டு உடைந்து விழுந்ததில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலென்பிந்துணுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது லொறியின் பின்புற பகுதி இடிந்து விழுந்ததில் நேற்று காலை இவ்விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் லொறியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரதேச வாசிகள் காயமடைந்த மாணவர்களை கலென்பிந்துணுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கலென்பிந்துணுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.