நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகளில் கடன்களை பெற்றுள்ளவர்களுக்கு ஆறுமாதகால சலுகையை வழங்குவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படிஇ பொருத்தமான சலுகைகளை கடன் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அனுமதிபெற்ற அனைத்து வங்கிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்துள்ள சவால்கள் மற்றும் மேலதிக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.
அதனை கருத்திற்கொண்டே மத்திய வங்கி அனுமதிபெற்ற வங்கிகளுக்கு மேற்படி வேண்டுகோளை விடுத்துத்துள்ளது. அதுதொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் தொழில் முயற்சியாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.