வட மாகாண முன்னாள் அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
மன்னார் நானாட்டானில் இருந்து வரும் போதே பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
விபத்தின்போது வாகனத்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. எனினும் குறித்த வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
முருங்கன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.