வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நடத்தத் தீர்மானம்?

0
187

ஒரு வருடத்தில் சராசரியாக 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாட்களைக்குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். அடுத்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இதன் இலக்காகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here