வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டம் – கந்தளாய், சேருவில நகரில் சஜித் பிரேமதாஸ

0
46
A new project to eradicate poverty – Sajith Premadasa in Kandalai, Cheruvila Nagar

“நாட்டை வங்குரோத்து அடையச் செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி, எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“அத்தோடு, வாழ்க்கைக்கான வழிகள் இன்றி, தெளிவான வருமான வரிகள் இன்றி, ஒவ்வொரு நாளுக்கும் மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாத வறிய மக்களுக்காக ‘ஜனசவிய, சமூர்த்தி, அஸ்வெசும’, மற்றும் ‘கெமிதிரிய’ ஆகிய வேலைத் திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை ஒன்றாகச் சேர்த்து, அவற்றின் குறைபாடுகளை நீக்கி, சிறந்த வேலைத் திட்டமொன்றையும் முன்னெடுப்போம்.

உணவுத் தேவை மற்றும் உணவுத் தேவை அல்லாத வேறு தேவைகள், சேமிப்பு, நுகர்வு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டும், வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஊடாக மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பதினாறாவது மக்கள் வெற்றிக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில்,   (26) முற்பகல் கந்தளாய், சேருவில நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

“தொடர்ந்து யாரும் வறுமையில் இருக்கக் கூடாது. வறுமை எனும் அடிமைத்தனத்திற்குக் கட்டுப்படாது. பல்வேறு நிகழ்வுகளினாலும் அரசாங்கத்தின் விவேகம் அற்ற, அக்கறை இல்லாத கொள்கைதா திட்டங்களினால் மக்கள் வறுமையில் சிக்கி இருக்கின்றார்கள். வறுமையில் இருந்து கொண்டு கையேந்துகின்ற, சமூகமொன்றை உருவாக்காது, அபிமானம் உள்ள மக்கள் வாழ்கின்ற, எமது நாட்டில் எவருடைய அடிமைச் சேவகர்களாக இல்லாமல் தன்னம்பிக்கையுடன், தன்னிறைவோடு எழுந்து நிற்க நம்பிக்கை உள்ள சமூகம் இருப்பதால், குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை இல்லாது செய்வோம்.
இந்த 20, 000 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்ற போது, 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்தச் சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து, வீடுகளிலேயே அனைத்து விடயங்களையும் நேர்த்தியாகவும், வளமாகவும் முன்னெடுப்பதால், அவர்களை மையமாகக் கொண்டே இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, தரமான 50 கிலோ நிறையுள்ள உர மூடையொன்றை 5, 000 ரூபாவிற்கு வழங்குகின்றோம். மக்களால் சகித்துக் கொள்ள முடியுமான தொகைக்கு உர மருந்துகளை வழங்குவதோடு, இருட்டடிப்பு வர்த்தகத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து, இவற்றை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக வழங்குவோம்.

விவசாயிகளுக்கும், மீன் பிடியாளர்களுக்கும், சக்கர வண்டிச் சாரதிகளுக்கும், பாடசாலை போக்குவரத்து வழங்குநர்களுக்கும் சக்தி அரசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here