வாக்களர்களுக்கு தேர்தல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

0
27

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் இன்று நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சில நடைமுறைகளை பின்பற்றுமாறு தேரர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல், தொலைபேசிகளை பயன்படுத்தல், போதைப்பொருள் பாவனையுடன் வாக்களிக்க வருகை தரல், ஆயுதங்களை வைத்திருத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையத்துக்கு உட்பட்ட 500 மீற்றர் சுற்றாடலில் வாக்கு கோருவது, குறிப்பிட்ட தரப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என கோருவது, துண்டுப் பிரசுரங்களை வழங்கல், சின்னங்களை காட்சிப்படுத்தல் உட்பட எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்களும், ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்குச் சீட்டுக்களும் வழங்கப்படும்.

வாக்காளர் ஒருவர் கட்சியொன்றுக்கு அல்லது தாம் விரும்பும் சுயேட்சைக் குழுவுக்கு வாக்களிக்க முடியும். அதன் பின்னர் புள்ளடியிட்டு மூன்று வேட்பாளருக்கு விருப்பு வாக்குகளை அளிக்க முடியும்.

தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் புள்ளடியை மாத்திரம் இடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் இலக்கங்களை இடுவது தொடர்பில் சில சிக்கல்கள் இருந்தன. புள்ளடி இடும் முறையை எமது மக்கள் நன்கு அறிவார்கள். நீண்டகாலமாக பின்பற்றும் இந்த முறையை பின்பற்றுமாறு கோருகிறோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here