வாக்களிக்குமாறு கோரி முன்னாள் தேர்தல் ஆணையாளர் துண்டுப்பிரசுரம்

0
122

ஜனாதிபதி தேர்தலில் அனைவரையும் வாக்களிக்குமாறு கோரி பொதுமக்களிடம் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளார்.

அம்பலாங்கொட தொடரூந்து நிலையத்தில் மக்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை இன்று புதன்கிழமை மகிந்த தேசப்பிரிய விநியோகித்தார்.

தேர்தலில் வாக்களிப்பது மக்களின் உரிமை என்றும் இந்த வாக்குரிமையை புறக்கணிக்கக்கூடாது என்றும் விநியோகித்த பின்னர் ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவித்தார்.

எனவே, இம்முறை அரச தலைவர் தேர்தலில் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று என்னால் கோரிக்கை விடுக்க முடியாது. எனினும், மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்துவதே தமது நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் தேர்தல் ஆணையாளர் ஒருவர் மக்களை வாக்களிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here