வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு

0
70

ஏப்ரல் 16ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தபால் மா அதிபர் ருவன் சரத்குமார தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் விசேட விநியோக தினமாக ஏப்ரல் 20 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு மேற்படி 3 தினங்களிலும் வாக்களிக்க முடியாமல் போகும் வாக்காளர்கள் ஏப்ரல் 28, 29 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே 06ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here