வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இனி பாடசாலைகள்

0
480

செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையே இனி பாடசாலைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த வாரம் முதல் மூடப்பட்டிருந்த நகர்ப்புற பாடசாலைகள் எதிர்வரும் வாரங்களில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் இயற்கும்.

அதாவது, செவ்வாய் (28), புதன் (29), வியாழன் (30) ஆகிய நாடகளில் மாத்திரம் இயங்கும். குறித்த பாடசாலைகளில், ஆரம்பப் பிரிவுகள் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு.

பாடசாலைக்கு வருகைதர முடியாத மாணவர்களுக்காகன கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்க வழங்க வேண்டிய செயற்பாடுகளை ஒன்லைன் ஊடாக வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் நகர்புறம் அல்லாத பகுதிகளில் உள்ள ஏனைய பாடசாலைகள் வழமைப்போல இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here