வாழ்த்தினார் ஜனாதிபதி ரணில்

0
209

பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்குக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமர் சுனக்கின் தலைமையின் கீழ் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறுமென்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யார் இவர்?

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார்.

பக்கிங்ஹம் அரண்மனையில் மன்னர் சார்ளஸை சந்தித்ததையடுத்து, அவர் பிரித்தானியாவின் 57ஆவது பிரதமராக உத்தியோகபூர்வமாக நியமனம் பெற்றுள்ளார்.

லிஸ் டர்ஸ்ஸின் இராஜினாமாவை ஏற்ற மன்னர் சார்ள்ஸ், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரிஷி சுனக்கை அரசாங்கத்தை அமைக்குமாறு அழைக்கப்பட்டார்.

அவர் இவ்வருடத்தில் பிரித்தானியாவின் பிரதமராக தெரிவாகும் மூன்றாவது நபராவார். இதற்கு முன்னதாக லிஸ் ட்ரஸ் மற்றும் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் கடந்த 7 வாரங்களில் பிரதமர் பதவியை வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பிரிட்டனை ஆட்சி செய்யும் வயதில் குறைந்த பிரதமராக ரிஷி சுனக் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

மன்னர் சார்ள்ஸை சந்தித்த ரிஷி சுனக் பின்னர் பிரதமர் அலுவலகம் உள்ள லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள டோவ்னிங் வீதியில் (Downing Street)  பிரதமராக தனது கன்னியை உரையை நிகழ்த்தினார்.

பிரிட்டன் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், லிஸ் ட்ரஸ் விட்ட சில தவறுகளை சரிசெய்ய புதிய கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக தான் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ட்ரஸ் பதவி விலகியதனால் ஏற்பட்ட ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்ற சுனக், கடந்த ஏழு வாரங்களில் இங்கிலாந்தின் மூன்றாவது பிரதமராக தெரிவாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here