தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (08) நள்ளிரவுடன் விண்ணப்பங்களை பொறுப்பேற்பது நிறைவடையவிருந்தது.
எனினும், தபால் செயற்பாடுகளில் காணப்பட்ட தாமதம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய நாளை (10) நள்ளிரவு வரை விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அன்றைய நாள் நிறைவடையவதற்கு முன்னர் உரிய மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அவற்றை ஒப்படைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் குறித்த காலவரையறை மீண்டும் நீடிக்கப்படமாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.