விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்தவர் மரணம்

0
199

பாரிஸ் விமான நிலையம் ஒன்றில் 18 ஆண்டுகள் வாழ்ந்த ஈரான் நாட்டவர் ஒருவர் அந்த விமான நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இராஜதந்திர குழப்பத்தில் சிக்கிய, மெஹ்ரான் கரீமி நசாரி என்பவர் 1988 ரொசி சார்ல்ஸ் டி கவுல் விமானநிலையத்தை தனது வாழ்விடமாக மாற்றிக்கொண்டார்.

அவரது கதையால் கவரப்பட்டு 2004இல் ‘தி டெர்மினல்’ என்ற பிரபல ஹொலிவுட் திரைப்படமொன்றும் எடுக்கப்பட்டது.

கடும் போராட்டத்தின் பின் நசாரிக்கு 2006இல் பிரான்சில் வாழும் உரிமை கிடைத்தபோதும் சில வாரங்களில் மீண்டும் விமானநிலையத்திற்கே திரும்பிய அவர், இயற்கை காரணத்தால் தனது 77ஆவது வயதில் மரணித்ததாக விமானநிலை அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here