திம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் சிறுத்தைப்புலி இருந்தமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலையே சிக்கியுள்ளது. உணவு தேடி இந்த வரும் வழியில் இவ்வாறு வீட்டுப்பகுதியில் இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சிறுத்தைப்புலியைக் கண்ட வீட்டாளர்களும் பிரதேச மக்களும் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் இது தொடர்பில் நுவரெலியா வனஜீவராசிகள் காரியாலயத்திகும் அறிவிக்கப்பட்டுள்ளது.