வெகு சிறப்பாக இடம்பெற்ற ‘ஷமா – இலுத் திர்மிதி’ பாராயண தமாம் மஜ்லிஸ்

0
46

122 ஆவது வருடமாக, ‘ஷாதுலியாத் தரீக்கா’ வின் தலைமையகமான கொழும்பு – உம்மு ஸவாயாவில், புனித ‘ஷமா – இலுத் திர்மிதி’ பாராயண மஜ்லிஸ் தமாம் வைபவம்,   (16) திங்கட்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பிறந்த புனித ரபீ – உனில் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக, இப்புனித சங்கைமிகு மஜ்லிஸ், வருடாந்தம் நடைபெறுகிறது.
உம்மு ஸவாயா பிரதம இமாமும், அஜ்வாத் அல் – பாஸி அரபுக் கல்லூரி முதல்வருமான ‘கலீபதுஷ் – ஷாதுலி’ மெளலவி எம்.எஸ். அஹ்மத் சூபி (மஹ்ழரி) தலைமையில் கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை காலை, இப்பாராயண மஜ்லிஸ் ஆரம்பமாகி, தினமும் 12 நாட்கள் ஓதப்பட்டு வந்து, ( 16) காலை தமாம் நிகழ்வுக்கு வருகிறது.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, இப்புனித ஹதீஸ் பாராயண தமாம் நிகழ்ச்சிகளை, மு.ப. 8:30 மணி முதல் 10:30 மணி வரை நேரடியாக அஞ்சல் செய்திருந்தது.

‘கலீபதுஷ் – ஷாதுலி’ மெளலவி அஹமத் சூபி (மஹ்ழரி) ஹதீஸ் விளக்கவுரை நிகழ்த்த, மௌலானா மௌலவி அஸ் – ஸெய்யித் பழுழுத்தீன் ‘துஆ’ பிரார்த்தனை இறைஞ்சினார்.

உம்மு ஸவாயா நிர்வாக சபைத் தலைவர் ‘தேசபந்து’ அல் – ஹாஜ் மக்கி ஹாஷிம் தலைமையிலான நிர்வாக சபையின் வழிகாட்டலின் கீழ், இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நிர்வாக சபையின் சமய விவகாரக் குழுத் தலைவர் அல் – ஹாஜ் பெளஸான் அன்வர் உட்பட நிர்வாகிகள், உலமாக்கள், கலீபாக்கள், முகத்தமீன்கள், இஹ்வான்கள் எனப் பலரும், இப்புனித சங்கை மிகு மஜ்லிஸ் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here