“வெற்றிலையுடன் வந்து வணங்கினாலும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன்”

0
245

“வெற்றிலையுடன் வந்து வணங்கினாலும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன்” என்று அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியான சிங்கள வார ஏடொன்றின் அரசியல் பத்தியில் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் 22 ஆவது அரசமைப்புத் திருத்தம் பிரதானமாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் முதலில் உரையாற்றியவர் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் இங்கு கருத்து வெளியிட்டார்.

இவர்கள் இருவரும் அரசமைப்பு திருத்தத்திற்கு எதிராக உரையாற்றினர். “20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், 22 ஆவதுக்கு எவ்வாறு உடன்பட முடியும்? அதற்கு உடன்படுவது கடினம்” என்றார் காரியவசம்.

சரத் வீரசேகர வழமை போன்று அரச தலைவருக்கான அதிகாரங்களை நீக்குவதற்கு எதிராக கருத்து வெளியிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கேட்கவிருந்த கேள்வியை அரச தலைவரிடம் கேட்டவர் மஹிந்தானந்த அளுத்கமகேதான். 22 ஆவது அரசமைப்பு திருத்தத்தில் இன்னும் இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பாராளுமன்றம் கலைக்கப்படுமா, கலைக்கப்படதா என்று உறுதியளித்தால் எமது உறுப்பினர்கள் திருப்தியடைவார்கள்.

மகிந்தானந்தவின் கேள்விக்கு அரச தலைவர் வெளிப்படையான பதிலை வழங்கினார். “வெற்றிலையுடன் வந்து வணங்கினாலும் இரண்டரை வருடத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன்.” என்றார்.

அரச தலைவரின் இந்தப் பதிலைப் பார்த்து அனைவரும் சிரித்தாலும், ஒரு அரச தலைவரைப் பிரதிபலிக்கும் அளவுக்கு இந்த பதில் உறுதியாக இருப்பதாக தெரிந்தது.

ராஜபக்சக்களை பாதுகாத்து சில காலம் அரசியல் செய்து வரும் காமினி லொக்குகே அரச தலைவருடன் உரையாடும் போது இரட்டை குடியுரிமை தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த அரச தலைவர், “இது என்னால் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு திருத்தம் அல்ல. ஆனால் என்னிடம் கேட்கப்பட்டதால் பதில் தருகிறேன். இரட்டைக் குடியுரிமை தொடர்பான பிரேரணை என்னால் கொண்டு வரப்படவில்லை. முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சதான் இந்த பிரேரணையை கொண்டு வந்துள்ளார்”. என்று தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here