வெளிநாடுகளுக்கு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

0
225

சுகாதார அமைச்சின் நியதிகளுக்கு முரணாக வெளிநாடுகளுக்கு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்களின் வழிகாட்டல் அறிவுறுத்தல்களுக்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறும் டாக்டர்களுக்கே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சபையில் தெரிவித்த அமைச்சர், அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவரென்றும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள ஆலோசனை அறிவுறுத்தல்களுக்கு முரணாக வெளிநாடு செல்லும் டாக்டர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவையில் ஈடுப்படுவதற்கும் தடையேற்படுத்தப்படும்.

அதேவேளை சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல் டாக்டர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவிக்கவும், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்தில் அவர்களின் விடுமுறை தொடர்பான பத்திரங்களை ஆராயுமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here