சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளை சார்ந்த பெரும்பாலான பணியாளர்கள் வெளிநாடு சென்றுள்ளார்கள் இது குறித்து விரைவில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் மற்றும் மாகாண சபை, உள்ளுராட்சி சபைகளுக்கிடையிலான அபிவிருத்தி திட்டங்களை மேலும் விரிவு படுத்துவது மற்றும் செலவினங்களை கட்டுபடுத்தல் சம்பந்தமான
ஒன்றிணைந்த அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்று சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நாட்டில் ஒன்பது மாகாணங்களிலும் மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்து.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண ஆளுநர்,
சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பணியாளர்கள் ஓய்வு பெறுவது மற்றும் வெளிநாட்டுக்கு செல்வது குறித்து விசேட கவனத்திற் கொள்ள வேண்டும்.
கல்வித்துறையில் ஆங்கிலம்ää விஞ்ஞான ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இது குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
சப்ரகமுவ மாகாணத்தில் அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து வேலைத் திட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகார்களுக்கு தெளிவுபடுத்தவதுடன் அவர்களையும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர கபில கன்னங்கர்.
சப்ரகமுவ மாகாணத்தில் இந்த வருடம் (2022) பெரும்பாலான விசேட வைத்திய நிபுனர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தி இரசாயன தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வெளிநாடு சென்றுள்ளதுடன்ää ஓய்வு பெறவும் உள்ளனர்.
இதன் காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் எற்பட்டுள்ளன.
சப்ரகமுவ மாகாணத்தில் விசேட வைத்திய நிபுனர்கள் 3 பேரும், ஏனைய வைத்தியர்கள் 14 பேரும், தாதியர்கள் 25 பேரும், இரசாயன தொழிநுட்பவியலாளர்கள் 3 பேரும், சுகாதார ஊழியர்கள் 7 பேரும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்கள்.
இவ்வருடம் வைத்தியர்கள் 15 பேரும், பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் 22 பேரும். தாதியர்கள் 9 பேரும் ஓய்வு பெற உள்ளார்கள்.
மேலும் இம்மாகாணத்தில் சுகாதார துறையில் உள்ள பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாட்டுக்கு செல்லவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ. இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, அகில சாலிய எல்லாவல, ராஜிகா விக்ரமசிங்க, உதயகாந்த குனதிலக்க, வருன லியனகே, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத் உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ்