மட்டக்களப்பு, களவங்கேணி கடல் பகுதில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு விசாரணைகளுக்காக கொண்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா செல்வதற்கான படகில் ஏற, களுவங்கேணி கடற்கரையில் வாகனம் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர், காவல் துறையினருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததையடுத்தே ஏனைய 77 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களிடமிருந்து 14 இலட்சம் ரூபாவையும் வாகனம் ஒன்றையும் ஏறாவூர் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.