இந்த வருட ஜனவரி மாதம் முதல் 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்று பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 3 இலட்சமாக அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றுள்ளவர்களில் 60 சதவீதமானவர்கள் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.