2024 ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் FL4 என்ற வைன் ஸ்டோர்ஸ்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் 172 அடங்கும்.
மேல் மாகாணம் – 110
தெற்கு – 48
வடக்கு – 32
கிழக்கு – 22
மத்திய – 45
வடமத்தி – 14
வடமேல் – 30
ஊவா – 30
சப்ரகமுவ – 30
அதன்படி வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் – FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் சவைத்தலைவருமான பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து தனது உரையில் அவற்றை பொதுமக்களும் அறியக்கூடிய விதத்தில் வெளியிடுவதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.