வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு குறுக்கே குடைசாய்ந்ததில் லொறியொன்று விபத்துக்குள்ளானதாகவும் லொறியில் பயணித்த நால்வரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை சொரனதொட்டை வெலிகித்த பகுதியில் இன்று (05) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்த பொலிஸார் மேலும் மூவர் காயமடைந்து, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வீதிகளில் பாதுகாப்பு அரண்களை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மொனராகலையிலிருந்து வருகைத் தந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.