வைத்தியரொருவர் எடுத்த திடீர் முடிவு

0
141

அனுராதபுரம் மாவட்டம் ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக திங்கட் கிழமை காலை (12) மீட்கப்பட்டுள்ளதாக ஹொரவப்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய 38 வயதுடைய சாமர சதுரங்க எனவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது வைத்தியரின் மனைவி தமுத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருவதாகவும், ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here