ஹட்டன்- கண்டி பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்து வீழ்ந்து விபத்து

0
337
ஹட்டன்- கண்டி பிரதான வீதியின் வட்டவளை நகரை அன்மித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்த நிலையில் இவ் வீதியூடான போக்குவரத்திற்கு தடையேற்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக இவ் வீதி ஊடாக ஹட்டன  இருந்து கினிகத்தேன வழியூடாக கண்டி,கொழும்பிற்கு செல்லும் வாகனங்களும் அதேபோல் கொழும்பு, கண்டி பகுதிகளில் இருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு பயணிக்கும் வாகனங்களும் பயணிக்க முடியாத நிலையில் இவ் வீதியில் நீண்ட தூரத்திற்கு நீண்ட நேரமாக வாகனங்களும்,
பயணிகளும் கொட்டும் மழையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வட்டவளை பொலிஸார் பொது மக்களின் உதவிகளுடன் மரத்தின் பாரிய கிளைகளை அகற்றி போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here