ஹட்டன்  கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளராக பதவியேற்றார் ரி. நாகராஜ்

0
613

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் அதிபரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தருமான  T. நாகராஜ் அவர்கள் , ஹட்டன் கல்வி வலய
உதவி கல்விப்பணிப்பாளராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். ஹட்டன் கல்வி வலயத்திலே ஆசிரியராகவும் அதிபராகவும் நீண்ட காலம் பணியாற்றியு ள்ள இவர், 2016 முதல் நாவலப்பிட்டிய மத்திய கல்லூரியின் அதிபராக சேவை ஆற்றியுள்ளார்.

சிறந்த நிர்வாகத்திறன் மிக்க தலைமைத் துவத்தை வழங்கிய அதிபர்கள் வரிசையில் இவருக்கென்று தனியான ஓர் இடமுண்டு, கடவளை விக்னேஸ்வரா கல்லூரி, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் என்ப வற்றின் வளர்ச்சியில் இவரது தலைமைத் துவம் அளப்பரிய பங்காற்றியுள்ளமையை அப்பிரதேசங்களின் சமூகத்திலுள்ளோர் நன்கறிவர்.

அதே போல நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியில் இவரது காலம் பொற்காலம் என்றால் அது மிகையாகாது. கல்லூரியின் பெறுபேற்று வளர்ச்சி, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சமூகத்தினரையும் பாடசாலையையும் ஒன்றிணைத்தல் போன்றவற்றினூடாக அங்கீகாரத்திற்குரிய ஒரு கல்லூரியாக அதனை கட்டியெழுப்பிய பெருமை இவரை யேச் சாரும். கடந்த ஆண்டு இக்கல்லூரி நூற்றாண்டு விழாவினை இவரது தலைமையிலே கொண்டாடியமையும் இதற்கு உயர் சான்றாகும்.

அந்த வகையில் இன்று உதவி கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள இவரது சேவைக்காலம் சிறக்க கல்விச் சமூகத்தினரின் சார்பில் உளமாற வாழ்த்துகின்றோம்.
எம். அகிலன் – விரிவுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here