ஹொரன பெருந்தோட்ட நிர்வாகத்தின் கொட்டத்தையும் அடக்கிய ஜீவன் தொண்டமான்

0
343
ஹொரன பெருந்தோட்ட நிர்வாகத்துக்குட்பட்ட கவரவில தோட்டத்தின் நிர்வாக கெடுப்பிடி மற்றும் அடக்கு முறையினால் அத் தோட்ட தொழிலாளர்கள் கடந்த காலங்களில் அனுபவித்து வந்திருந்த சகல பிரச்சினைகளுக்கும்  பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக்கொடுத்துள்ள இ.தொ.கா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஹொரனபெருந்தோட்ட நிர்வாகத்தின் கொட்டத்தையும் அடக்கியுள்ளார்.
சாமிமலை கவரவில தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம்,மற்றும் தொழிலாளர்களின் விவசாய நடவடிக்கைக்கு தோட்ட நிர்வாகம் அடாவடி தனத்தை காட்டி குந்தகம் விளைவித்தமை உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான உரிமைகள் மறுப்பு விடயங்கள் தொடர்பில் ஹட்டன் தொழில் திணைக்கள மேலதிக தொழில் ஆணையாளர் மத்தியில் பேச்சுவார்த்தை ஒன்று (06.11.2022) நடைபெற்றது.
இதன்போது கவரவில தோட்டத்தில் தொழில் நிமிர்த்தம் பணியில் அமர்த்தப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நல்லையா சிவக்குமாருக்கு அத் தோட்ட நிர்வாகம் நட்டயீடு வழங்க வேண்டும்.
மேலும் தொழிலாளர்களுக்கு நோம் அடிப்படையில் மூன்று கிலோவுக்கு அதிகமான தேயிலை சுரண்டப்படுவதை நிறுத்த வேண்டும்.
அத்துடன் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது எந்தவோர் விசாரணையும் இன்றி அடக்கு முறையை கையாண்டு தான்தோன்றி தனமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.
என இன்னும் பல உரிமை சார் விடயங்களை  இ.தொ.கா பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட  குழுவினர் முன்வைத்து  தொழில் மேலதிக ஆணையாளர் மத்தியில் தோட்ட நிர்வாகத்தை உட்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் இ.தொ. கா முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஹொரன பெருந்தோட்ட நிர்வாகம் இறங்கியுள்ள நிலையில் கவரவில தோட்ட தொழிலாளர்கள்  தோட்ட தொழிற்சாலையிலிருந்து தேயிலை பெட்டிகளை கொண்டு செல்ல முடியாது நடத்தப்பட்ட போராட்டம் வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
அதேநேரத்தில் இப்பேச்சுவார்த்தை ஊடாக தோட்ட நிர்வாகம்  இணங்கிய அனைத்து விடயங்களையும் கடிதமூலமாக எமக்கு வழங்க வேண்டும் என ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டமைக்கும் தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது..
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here