10 நாட்களில் 22 கோடிக்கும் அதிகமாக வசூலித்த ‘வாழை’

0
125
vaalai- movie directed by Mari Selvaraj released on 23rd August.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் வாழை. வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் வெளியாக 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் வெளியாகிய இத் திரைப்படம் 10 நாட்களில் 22 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

மாரி செல்வராஜின் வெற்றிப் படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் வரிசையில் தற்போது வாழையும் இணைந்துகொண்டது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23ஆம் திகதி அன்று வெளியானது வாழை திரைப்படம்.

வாழை திரைப்படம் எப்படி இருக்கிறது?

பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமான வாழை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் கலையரசன், பொன்வேல், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பல திரைநட்சத்திரங்கள் இந்த படத்தை வியந்து தங்களின் கருத்தை வெளியிட்ட காரணத்தால் படம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். படிக்க விரும்பும் சிறுவன் சிவணைந்தன், வறுமையான குடும்ப சூழலில் வங்கிக் கடனை அடைப்பதற்காக வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு செல்கிறார்.

குறைவான சம்பளத்திற்கு வேலை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கேட்டும் அந்த ஊர்க்காரர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி சம்பள உயர்வுக்கு ஒப்புக் கொள்கிறார் முதலாளி.

சம்பள உயர்வு வாங்கியதை மனதில் வைத்துக் கொண்டு, தன்னிடம் பணியாற்றும் மக்களை வேறொரு பிரச்னைகளுக்குள் சிக்க வைத்து விடுகிறார் அவர். இந்த ஆபத்தில் இருந்து சிவணைந்தன் தப்பித்தாரா? வாழைத்தார் சுமக்கும் பணியில் இருந்து அந்த சிறுவனுக்கு விடுதலை கிடைத்ததா என்று கதை நகர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here