கோழி பண்ணை ஒன்றிலிருந்து 101 கோழிகளை திருடிச் சென்றதாகக் கூறப்படும் இருவரை நேற்று சனிக்கிழமை (13) இரவு கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி பிரதேசத்தில்
அமைந்துள்ள கோழிப்பண்ணை ஒன்றிலிருந்து கடந்த மாதம் 20 ஆம் திகதி இரவு 101 கோழிகள் திருட்டுப் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிசிரி கெமரா திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு நாவற்கேணி பகுதியில் சந்தேக நபர்கள் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்