சேதப்படுத்தப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அமரர் டி.ஏ.ராஜபக்ஷ நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது சிதைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையாரான அமரர் டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களின் போது சிதைக்கப்பட்ட டி.ஏ. ராஜபக்சவின் சிலையை அப்பகுதி மக்கள் புனரமைத்துள்ள நிலையில் இன்றைய தினம் அவருடைய 55ஆவது நினைவு தின நிகழ்வு தங்காலையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர் உட்பட பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.