அரிசிக்காக உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது முதல் அதிகூடிய விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை குறித்து தேடியதில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்போது குற்றவாளிகளிடமிருந்து 3 மில்லியன் ரூபாவை அபராதமாக பெற்றுக்கொண்டதாக நுகர்வோர் விவகார அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 106 வர்த்தகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரச் சபை தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.