பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் பகுதிநேர வகுப்பாசிரியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) ஆசிரியரிடம் இருந்து 1,299 மாத்திரைகளை கைப்பற்றியதுடன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரான சந்தேக நபர், சரியான மருந்து சீட்டு அல்லது வைத்தியரின் ஆலோசனையின்றி மாத்திரைகளை வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மாவனெல்லையில் நிரந்தர வதிவிடமாக களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றது.