13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் போதைப்பொருள் பயன்பாட்டினால், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி, பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்பாட்டு பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகளில் மாத்திரம் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளது. இவ்வாறு சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறார்களில் பெரும்பாலானோர் துஷ்பிரயோகத்தினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பாடசாலை மாணவர்களின் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனைத் தடுப்பதற்கு திட்டமொன்று தேவைப்படுவதாகவும் டொக்டர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.