13 வயது மாணவரின் சப்பாத்துக்குள் பாம்பு

0
499

மாணவர் ஒருவர் அணிந்திருந்த காலணிக்குள் (சாப்பாத்துக்குள் ) சிறிய பாம்பு ஒன்று இருந்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவர் பாடசாலைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, அவருடைய ஒரு காலணிக்குள் ஏதோ நெளிவதை உணர்ந்துள்ளார். பின்னர் பாடசாலைக்கு வந்து தனது காலணியைக் கழற்றியுள்ளார்.

இதன்போது அதற்குள் சிறிய பாம்பு ஒன்று இருந்துள்ளதையடுத்து, வயதுடைய மாணவரை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பாடசாலை நிர்வாகம் அனுமதித்துள்ளது.

இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது குறித்த பாம்பினால் மாணவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியானதாக பணிப்பாளர் டக்டர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here