டன்சினணிலிருந்து பூண்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதை இன்றைய தினம் (20) மக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டு வந்த 9 கி.மீ வரையிலான குறித்த பாதையானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் அமைச்சின் 13 பில்லியன் ரூபாய் நேரடி நிதி ஒதுக்கீட்டீன் மூலம், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கார்ப்பட் இடப்பட்டுள்ளது.
இந்தி வீதியினை 30 க்கூம் மேற்பட்ட தோட்டங்களை சார்ந்த பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை தேவைளுக்கு, மற்றும் பல்வேறு வகையிலான தேவை பாடுகளுக்காக மக்கள் பயண்படுத்தி வந்தனர்.
இதன் போது அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் பந்துல குனவர்தன நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
எஸ்.சதீஸ்