இளவயதில் விமானமோட்டியவர் என்கிற சாதனையை 14 வயதான அனாயா சொஹைல் என்ற சிறுமி நிறைவேற்றியுள்ளார். விமானம் ஒன்றை தனி நபராக கனடா பெருநகரப் பகுதியில் செலுத்தி அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
ஆலோசகருடன் பல தடவைகள் விமானத்தைச் செலுத்தியிருந்த போதிலும் முதன்முறையாக தனியாக விமானத்தை செலுத்தியமை ஆர்வம் மிகுந்ததாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வானத்தில் எப்போது விமானத்தைப் பார்த்தாலும், அதனைச் செலுத்த வேண்டும் என சிறுவயது முதலே தாம் கனவு கண்டு வந்ததார் என அனாயா தெரிவித்துள்ளார்.