146 புது முகங்களுடன் பதியேற்கவுள்ள புதிய அமைச்சரவை

0
114

146 புதிய முகங்களுடன் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.

இதன்போது, அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களில் 146 பேர் முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.  இவற்றுள்,  ; தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியில் வெற்றிபெற்ற 141 பேரில் 130 எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி (எஸ்.ஜே.பி.) பெற்றுக்கொண்ட 35 பாராளுமன்ற இடங்களில் எட்டு புதிய எம்.பி.க்கள் தெரிவாகியுள்ளனர். 27 பேர் இதற்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள்.

ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன (SJB), சார்பாக ஒரே ஒரு புதிய எம்.பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோல, இலங்கைத் தமிழரசு கட்சி ஆறு இடங்களைப் பெற்றது, அதில் மூன்று புதிய எம்பிக்கள் வெற்றி பெற்றனர். ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும் (ளுடுஆஊ) புதிய உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், புதிய ஜனநாயக முன்னணி (NDF) இந்த ஆண்டு தேர்தலில் மூன்று எம்பி ஆசனங்களைப் பெற்றது, அவர்கள் அனைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here