15 லட்சத்துக்கும் அதிகமான ‘Likes’ பெற்ற புகைப்படம்

0
134

உக்ரைனுக்குச் முதன்முறையாக   சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி ஸெலென்ஸ் கியை சந்தித்து பேசியதை அடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படம்  சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஸெலென்ஸ்கி அதனை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

.ஸெலென்ஸ்கியின் இந்த பதிவு சில மணி நேரங்களில் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட ‘லைக்ஸ்’களை பெற்றது. இது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் சாதனையாக மாறியது.

இதற்கு முன் 7.8 இலட்சம் ‘லைக்ஸ்’களை பெற்றதே அவரது அதிகபட்சமாக இருந்தது. தற்போது மோடியுடனான இந்த புகைப்படம் அதை முறியடித்திருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here