15 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் வழங்க மறுத்த நிர்வாகத்திற்கெதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
427

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வௌரலி, மோனிங்டன், போட்மோர், ஆட்லி உள்ளிட்ட தோட்ட நிர்வாகம் தொழி லாளர்களுக்கு இம்முறை வழங்க வேண்டிய தீபாவளி முற்பணம் 15 ஆயிரம் ரூபா தருவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்திருந்த போதிலும் இத்தோட்ட நிர்வாகம் இதனை மறுத்து 5000 ரூபாய் பத்தாயிரம் ரூபா என் தீபாவளி முற்பணம் வழங்க மறுத்த தோட்ட கம்பனிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

15ஆயிரம் ரூபா முற்பணம் தருவதாக இன்று அறிவித்ததையடுத்து இத்தோட்டத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் இரண்டு மணி நேரம் இடம்பெற்றதோடு அதன்பின் வேலைக்கு செல்லாமல் தொழிலாளர்கள் வீட்டுக்கு திரும்பினர். இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,

தாம் முறையாக வேலை செய்ததாகவும் தற்போது எமக்கு வழங்கப்படும் முற்பணம் மாத சம்பளத்தில் அறவிடப்படும் எனவும் பெருந்தொட்ட கம்பெனி 15 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியிருந்த போதிலும் இதனை தோட்ட நிர்வாகம் வழங்க மறுத்துள்ளது.
விலைவாசி அதிகரிப்பு பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கும்போது எவ்வாறு தீபாவளியை கொண்டாட முடியும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here