இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வலது குறைந்தவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.டபிள்யூ.எஸ்.பண்டார தலைமையில் பொகவந்தலாவை ஹொலிரோஸரி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது, Your Community Foundation Srilanka என்ற நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.சர்ஜானின் தலைமையில் பொகவந்தலாவை பகுதியில் உள்ள வலது குறைநதவர்களுக்கான சக்கர நாட்கலி மற்றும் ஊண்றுகோல் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றது. நிகழ்விற்கு ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.