1585 பேருக்கு ஹஜ் செல்ல அனுமதி

0
296

ஹஜ் கடமையை நிறைவேற்றுவற்றுவதற்காக இம்முறை மக்கா, மதீனாவுக்கு யாத்திரையை மேற்கொள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார்  தெரிவித்தார்.

அத்துடன் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக, இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஒவ்வொரு ஹஜ்ஜாஜியும் 1,500 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டிலிருந்து இலங்கையிலுள்ள தமது வங்கிக் கணக்குக்கு தருவிக்க வேண்டும். அந்தப் பணத்தை அவர்கள் தமது ஹஜ் யாத்திரைக்காக பயன்படுத்த முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை ஹஜ் யாத்திரிரையை மேற்கொள்ளவென 1585 பேருக்கான கோட்டாவை சவூதி அரேபிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளவென பதிவு செய்துள்ளவர்களும் ஏனையவர்களும் நாளை வெள்ளிக்கிழமைக்குள் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான விஷேட கரும பீடமொன்று திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here