மார்ச் 12 இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது விவாத மேடைக்கு வருவதற்கு 16 ஜனாதிபதி வேட்பாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட விவாதம் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளதுடன், இதில் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர மற்றும் அரியநேத்திரன் ஆகிய ஜனாதிபதி யோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே ரோஹண ஹெட்டியாராச்சி இதனை கூறியுள்ளார்.
இதன்போது பப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 12 இயக்கத்தால் ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்றும், “அனைத்து ஊடகங்க#ளின் ஊடாகவும் இந்த விவாதம் ஒளிபரப்பாகவுள்ளது” என்றும் தெரிவித்தாா்.
“இதன் முதலாவது விவாதம் இன்று 7ஆம் திகதி மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் நடக்கவுள்ளது. நான்கு வேட்பாளர்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்ததார் பப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி.
“சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர மற்றும் அரியநேந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினாா்.
“மேலும் பல வேட்பாளர்கள் அடுத்துவரும் விவாதங்களில் கலந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றோம்” என்றும், “இரண்டாம் கட்டத்தில் 6 வேட்பாளர்களும், மூன்றாம் நாளில் 6 வேட்பாளர்களும் என 16 வேட்பாளர்கள் பொது மேடையில் விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இதனுடாக அனைத்து வாக்காளர்களும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்று கருதுகின்றோம்” என்றும் பப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தாா்.