லுணுகலைபகுதியில் இருந்து பிபிலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்றை, பொலிஸார் இடைமறித்து சோதனைக்கு உட்படுத்திய போது லொறியினுள் 16 ஆடுகள் இருந்துள்ளன.
இதனையடுத்து மிருக வதை சட்டத்தின் கீழ், 32 வயதுடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று 08-06-2022ல் இடம்பெற்றுள்ளது.
இவர் லுணுகலை ஜனதாபுற பகுதியிலிருந்து பிபிலை நோக்கி ஆடுகளை கொண்டு சென்றதாவும், நபரிடம் ஆடுகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் இருந்த போதிலும் அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடுகளை விடவும் அளவுக்கு அதிகமான ஆடுகளை கொண்டு சென்றமையாலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர், பதுளை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.