இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அனைத்து டிப்போக்களின் முகாமையாளர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட அனைத்து டிப்போக்களும் நேற்று (12) முதல் திங்கட்கிழமை (18) வரை டிப்போக்களிலுள்ள அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொழும்புக்குட்பட்ட பகுதிகளிலும் கொழும்புக்கு அப்பால் ஏனைய பிரதேசங்களிலும் பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், தற்போதைய நேர அட்டவணைக்கு அமைவாக பஸ்களை சேவைகளில் ஈடுபடுத்துமாறு அவர் அனைத்து மாகாண டிப்போக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு பிராந்தியங்களில் நேற்று மேலதிகமாக 70 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேலும் 80 பஸ்கள் இன்று கொழும்பு கோட்டையில் சேவையில் ஈடுபடுத்தவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த பஸ்கள் தற்போதுள்ள நேர அட்டவணைக்கு சேவையில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.