க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் , செயலமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டுமேன பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனிடையே பரீட்சை காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சைகள் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக மாகாண மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.