1996 – 1997 நியமனம் பெற்ற ஆசிரியர்களின் 25ஆம் ஆண்டு பூரத்தி வெள்ளி விழா -2022 இன்று அட்டன் இ சாரதா மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், எஸ்.முரளிதரன் (கல்விப் பணிப்பாளர் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திப்பிரிவு) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் அட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஆர். சத்தியேந்திரா சிறப்பு அதிதியாகவும் கல்விப் பணிப்பாளர் இ மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
Ahilan Mookan FB
1996/1997ஆம் ஆண்டு காலப்பகுதியிலே தமிழ் மொழி மூல தகுதிகாண் ஆசிரிய பதவிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருபத்தைந்து வருடத்தை எட்டியுள்ளனர். வெள்ளி விழாவிலே நடைபயின்று கொண்டிருக்கும் ஒரு தொகுதியினரே இன்று வெள்ளி விழா கொண்டாடியுள்ளனர்.
மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களுள் 96/97 ஆண்டுகளில் வழங்கப்பட்ட இந்நியமனம் முக்கியமானதொன்று என்பதை மலையகக் கல்வி வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு குறித்த தரவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பல்வேறு பாடத்துறைகளுக்கும் நியமனம் பெற்ற இவர்கள் ஊடாக பெருந்தோட்டப் பாடசாலைகள் புதிய வீச்சோடு பயணித்து பரீட்சைப் பெறுபேறுகளிலும். கல்வி அடைவுகளிலும் அசைவியக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
குறிப்பாக இந்நியமனதாரிகளில் பலர் தமது தகைமைகளோடு, ஆற்றல், அனுபவம், ஆளுமை என்பவற்றினால் பதவி உயர்வு பெற்று கல்விப்பணி ஆற்றி வருகின்றமை
யும் குறிப்பிடத்தக்கது.
அதிபர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, உதவி கல்விப் பணிப்பாளர்களாக, கோட்ட கல்விப்பணிப் பாளர்களாக, ஆசிரிய கல்வியியலாளர் களாக, விரிவுரையாளர்களாக என பல்வேறு பதவி நிலைகளில் பணியாற்றி வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எம்.கிருஸ்ணா