நாடளாவிய ரீதியில் இன்று சுமார் 2000 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதியளவு எரிபொருள் கிடைக்காதமையினால் 90 சதவீத பஸ்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பதாகவும் ஆகையால் இன்று 2 ஆயிரம் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.