2 இலட்சம் தனியார் துறையினர் அடுத்த ஆண்டின் 6 மாதத்துக்குள் பணிகளை இழப்பார்கள் என்று ஆய்வு மூலம் அறிய வந்துள்ளது. நிதி அமைச்சு நடத்திய சமீபத்தைய ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.
ஆசியாவிலேயே அதிக சதவீத அரச பணியாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பணியாளர்களில் 18 வீதத்தினர் அரச பணியாளர்கள். ஆனால், மிகவும் வளர்ச்சியடைந்த நாடான மலேசியாவில் அந்த சதவீதம் 14. மியன்மாரில் 5. ஒட்டுமொத்த ஆசியாவில், மற்ற நாடுகளில் உள்ள அரசு பணியளார்களின் விகிதம் 10வீதமாகும் – என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு – 9 வீதமாக இருக்கின்றதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.