20 இலட்சத்துக்கும் அதிகமான பணம் 13 பவுண் நகை கைத்தொலைபேசிகள் திருட்டு

0
389

20 இலட்சத்து 40 ஆயிரம் பணமும் 13 பவுண் நகையும் இரு கைத்தொலைபேசிகளும் திருடப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் உள்ள வீடு ஒன்றிலேயே இன்று அதிகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்றிரவு (29) மின்சாரம் தடைப்பட்ட நேரத்திலும் அதன் பின்னரும் வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்து பின்னர் நித்திரைக்குச் சென்றுள்ளனர். இதன் பின்னர் இரவு 11 மணியளவில் வியாபார நிலையத்தை மூடிய மகன் வீடு திரும்பி உணவை அருந்திவிட்டு நித்திரைக்குச் சென்றுள்ளார்.

வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணத்தையும் மற்றும் தான் அணிந்திருந்த தங்க நகைகளையும் கட்டிலின் கீழ் வைத்துவிட்டே அவர் உறங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் மனைவியின் குரல் கேட்டு எழுந்த வீட்டின் உரிமையாளர் தனது மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த மாலை காணப்படாததனை கண்ணுற்றுள்ளார். பின்னர் மகனின் அறையைப் பார்த்தபோது அவர் வைத்திருந்த பணம் நகை மற்றும் கைத்தொலைபேசி உள்ளிட்டவையும் திருடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸில் முறையிட்டுள்ளனர். பெபலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here