ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களின் எதிர்கால ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவரது கட்சிக்கு 20 லட்சம் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட. இருதயபுரம் மேற்கு பகுதியின் அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு மண்முனை வடக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் நவரத்தினராஜா ரகுநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சார செயலாளர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் இடம்பெற்ற பிரதம அதிதியாக கட்சியின் மாவட்ட முகாமையாளர் கணபதி பிள்ளை ஸ்ரீஷ்குமார் மற்றும் மாவட்ட பிரச்சார செயலாளர் வெற்றிவேல் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு அங்கத்துவ படிவத்தை வழங்கி வைத்தனர்
இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு அவர்களது சுய விவரங்கள் பதிய ப்பட்டு கட்சியின் அங்கத்துவ அட்டை வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்கால செயல் திட்டங்கள் சம்பந்தமான கையேடுகளும் இங்கு வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குகதாஸன்